Appayya Deekshitar and IIT Madras

Today, I received a Forwarded mail, which I would like to share.

Its in Tamil, and I am giving a free English translation of that, below the original mail.

The mail is from Sri Muthuchamy, and one is indeed grateful to him for sharing this with all.

Here goes….

**

From: Adiyen A. Muthuchamy <muthuchamymt@gmail.com>
Date: 2011/10/11
Subject: அப்பைய தீக்ஷிதரும் ஐ ஐ டி மெட்ராசும்

ஸ்ரீ காத்யாயனி அம்பிகா சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வர ஸ்வாமி திருகோயில் ஐ ஐ டி மெட்ராஸ்.

சென்ற வாரம் ஒரு சிவனடியார் அடியேனுக்கு அலைபேசியில் அழைத்திருந்தபோது அவரிடம், ஐ ஐ டி யில் இருக்கும் ஸ்ரீ ஜலகண்டேஸ்வர ஸ்வாமியின் பெயர்க் காரணம் கேட்டேன். அவரும்…”கண்டுபிடி முத்து” ன்னு சொன்னார். அன்று மாலையே ஐ ஐ டி வளாகத்தில் இருக்கும் ஜலகண்டேஸ்வர ஸ்வாமியின் சந்நிதிக்கு சென்றேன்.அங்குள்ள அர்ச்சகரிடம் ஸ்வாமியின் பெயர்க் காரணம் கேட்டேன். ஆயின், அவரோ காரணம் லாம் தெரியாது டா அம்பி….ஆனா இந்த ஸ்வாமி ரொம்ப புராதானமானவர், ஒரு பெரிய மகானால் பூஜிக்கப் பட்டவர் ன்னு சொன்னார். உடனே, அடியேன் அவரிடம் யார் அந்த மகான்? ஸ்வாமி இங்கு எப்படி வந்தார் ன்னு கேட்டேன்? அந்த கேள்விக்கு பதிலாக அவர் சொன்ன நிகழ்வு….ஐ ஐ டி கட்டுவதற்காக இடம் ஒதுக்கப்பட்டது. கட்டிட வேலைகள் மிக விரைவாக நடை பெற்றுக் கொண்டிருந்த வேளையில், ஆசிரியர்கள் தங்குவதற்கான கட்டிடங்கள் கட்டும் இடத்தில் தோண்டியபோது, பெரிய அளவிலான லிங்கத் திருமேனியினை கண்டெடுத்தனர். பக்தியுடன், ஸ்வாமியை வெளியே எடுத்துவைத்து பூஜையும் செய்தனர். பின்னர் ஒரு குழுவாக சேர்ந்து,சுவாமிக்கு இங்கு ஒரு சந்நிதி எழுப்பத் திட்டம் தீட்டினர்.  ஸ்வாமி சந்நிதிக்கான வேலைகளையும் சேர்த்தே கவனிக்க ஆரம்பித்தனர்.

சுவாமிக்கு என்ன திருநாமம் சூட்டாலாம் என்று அவர்களுக்கு ஐயம் எழுந்தது. உடனே அந்த குழுவில் இருந்து சிலர் காஞ்சி ஸ்ரீ மஹா பெரியவாளிடம் சென்று, இங்கு அவர்கள் கண்டுற்ற சுவாமியையும்,. அவருக்கு கோயில் எழுப்பபோவதாகவும், அந்த சுவாமிக்கு என்ன திருநாமம் வைக்கலாம் என்று உத்தரவு கேட்கவே வந்திருப்தாகவும் தெரிவித்தனர். சற்று நேரம் கண் மூடி அமர்ந்த மஹா ஸ்வாமிகள் தனது மௌனத்தை கலைத்தார்….”நீங்க யாரும் சுவாமிக்கு புதுசா பேரு வைக்க வேண்டாம், அவர் ஏற்கனவே பூஜையில் இருந்த ஸ்வாமி தான்” என்றார். எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்….!!! அப்போ சுவாமிக்கு என்ன திருநாமம் என்று மீண்டும் கேட்டனர். ஐ ஐ டி க்கு அருகில் உள்ள ராஜாஜியின் நினைவகத்தின் பத்திரங்களை நன்கு படித்துப் பாருங்கள் விடை கிடைக்கும் என்று அருளினார். அதோடு நில்லாமல்..அந்த ஸ்வாமி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அப்பைய தீகஷிதரால் பூஜை செய்யப் பட்டவர் என்றும் அருளிச் செய்தார்..ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவாள். அப்பளக் குளம் என்ற இடம் ஐ ஐ டி க்கு அருகில் இருந்ததாம்…அது உண்மையில் அப்பையர் குளம் என்பதேயாம், என்றும் அருளினார். (இப்பவும் ஐ ஐ டி க்கு உள்ள குளம் இருக்கு….ஆனா பார்ப்பதற்கு குளம் மாதிரி தெரியலை)

ஐ ஐ டி க்கு திரும்பிய அக்குழுவினர், ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அருளியபடி ராஜாஜியின் நினைவகத்தின் பத்திரங்களை எடுத்துப் பார்த்தபோதுஅதில் ஸ்வாமியின் பெயர் ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் என்று குறிப்பிட்டிருந்தது. அது கண்டு மனம் மகிழ்ந்த குழுமத்தினர், கோயிலை அழகுற எழுப்பி, ஸ்ரீ மஹா சுவாமிகளையே திருக் குடமுழுக்கு செய்தருளும்படி வேண்டினர். ஸ்ரீ மஹா சுவாமிகளும் அவர்கள் வேண்டுகோளின்படியே அருளினார்.

சரி சரி….எல்லாரும் கண்டிப்பா ஐ ஐ டி க்கு வந்து இந்த ஸ்வாமியை சேவிச்சுட்டு அத்துடன் மறக்காமல் அடியேனை ஆசீர்வதித்து அருளணும் ன்னு கேட்டுக்குறேன். எல்லாரும் கிளம்பிட்டீங்களா???? சீக்கிரமா வாங்க.

ஜலகண்டேஸ்வரர் என்ற திருநாமம் பற்றி யாருக்கேனும் தெரிந்திருந்தால் சொல்லி அருளவும்.

**Begin Translation**
**
From: Adiyen A. Muthuchamy  <muthuchamymt@gmail.com>
Date: 2011/10/11
Subject: Appayya Deekshitar and IIT Madras
*
kAtyAAyanI ambikA samEta shrI jalakanTEswarar swami temple. IIT  madrAs
*

Last week, while speaking to a Siva bhakta, I spoke to him about the Siva temple at IIT and asked him the reason the Lord was named as jalakanTEswarar.

In response… “ (why don’t you) Find out Muthu”, said he.

The same day, I went in the evening to IIT campus and visited the temple of jalakanTEswarar. I asked the temple priest about the reason for the name. He told me “I don’t know ambi… but the lord here is very ancient. He has been worshipped by a great saint.” Forthwith. I asked him who that saint was. In response to my question, here is what he told me…

When IIT Madras was being built, they were digging the ground for laying foundation of the area where the staff quarters were to come up. While digging, they unearthed a huge Siva linga that lay buried there. With devotional fervor, they brought it out and offered worship. They then decided to build a shrine for the idol, and started to work on this.

In that process, they wondered as to what name may be given to the Lord. To decide on that, a few people of that group wnet to Kanchi Mahaperiyava (Jagadguru Shankaracharya Sri Chandrasekarendra Saraswati), and requested his guidance. The Mahaswami closed his eyes and sat in silent absorption for a while, and then breaking his Mauna, he told them – “You do not have to give any new name to the Lord. He has been in worship much before (and already has a name)”.

All the assembled devotees were wonderstruck.

On their asking as to what the name was, Mahaperiyava directed them to go look at the property documents of Rajaji Memorial, which is near the IIT campus, to find the name of the Lord. He didn’t stop with that. He extended his grace and added that the idol had been worshiped by Sri Sri Sri Appayya Deekshitar. He also said that there is a lake in that area which is now known as “Appala kulam”, whose actual name is “Appayya Kulam”. (Even today there is a lake inside IIT. But doesn’t look much of a lake).

After returning, the group went and inspected the property papers of Rajaji Memorial, and were immensely happy to find a reference that the Lord had the name ‘jalakanTEswarar’. Thereafter, they built a nice temple, and prayed to Mahaperiyava to grace the kumbhAbhishEkam. His Holiness acceded to their prayer and graced the occasion.

All right, all right… All of you please do visit the temple at IIT, offer worship to the Lord, and also bless this devotee (Muthu)… That is my humble request. Have you started? Come quick.

If anyone knows any other particulars pertaining to the name jalakanTEswarar, please do let me know.

**End translation**

Nama Sivaya!

Tags: , , , ,


%d bloggers like this: